சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளே அல்ட்ரா 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளே அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. கேமிங் செக்மென்ட் போனாக இது சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
லாவா பிளே அல்ட்ரா 5ஜி போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
- 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- மீடியாடெக் டிமான்சிட்டி 7300 சிப்செட்
- 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா
- 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 33 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 6ஜிபி / 8ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- இந்த போனின் விலை ரூ.14,999 என அறிவிக்கப்பட்டுள்ளது