சென்னை: சாம்சங் நிறுவனம் கேலக்சி எஸ்25 FE ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். இதில் கேலக்சி S25 சீரிஸ் பரவலாக அறியப்படும் ஹை-எண்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக உள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் எஸ்25, எஸ்25+ மற்றும் எஸ்25 அல்ட்ரா உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்தது. கடந்த மே மாதம் எஸ்25 எட்ஜ் போன் அறிமுகமானது. இந்த சூழலில் தற்போது எஸ்25 FE போன் அறிமுகமாகி உள்ளது.
சாம்சங் கேலக்சி S25 FE சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
- 6.7 இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே
- Exynos 2400 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
- 7 ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது
- 50+12+8 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
- 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 8k தரத்தில் இந்த போனை பயன்படுத்தி வீடியோ ஷூட் செய்யலாம்
- 8ஜிபி ரேம்
- 128 / 256 / 512ஜிபி ஸ்டோரேஜ்
- 4,900mAh பேட்டரி
- 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- ஏஐ அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது
- மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இந்திய ரூபாய் மதிப்பில் இந்த போனின் விலை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும்