குபெர்டினோ: அமெரிக்க நாட்டில் இந்திய நேரப்படி நேற்று (செப்.9) இரவு 10.30-க்கு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்வில் ‘ஐபோன் 17 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்து வைத்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ளது ஐபோன் 17 சீரிஸ் போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் போன்களில் ஆப்பிள் நிறுவனமும் முன்னிலை வகிக்கிறது. ஏஐ அம்சங்கள், 256ஜிபி ஸ்டோரேஜ் கேமரா, புரோ சீரிஸ் போன்களில் ட்ரிபிள் கேமரா, ஏ19 புரோ சிப் மாதிரியானவை கவனம் பெற்றுள்ளது.
தற்போது சந்தையில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த முறை புது வரவாக ஐபோன் 17 ஏர் வெளிவந்துள்ளது. இதோடு ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஆப்பிள் வாட்ச் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 3 அல்ட்ரா உள்ளிட்ட கேட்ஜெட்களும் அறிமுகமாகி உள்ளன. வரும் 19-ம் தேதி சந்தையில் இவை விற்பனைக்கும் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
ஐபோன் 17 சிறப்பு அம்சங்கள்
- 6.3 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் டிஸ்பிளே
- ஏ19 சிப்செட்
- ஐஓஎஸ் 26 இயங்குதளம்
- 256 / 512ஜிபி ஸ்டோரேஜ்
- பின்பக்கத்தில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 48 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது
- 18 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- 24 மணி நேர பேட்டரி பேக்-அப் இதில் உள்ளதாக ஆப்பிள் கூறியுள்ளது
- 5 வண்ணங்களில் வெளியாகி உள்ளது
- ஆப்பிள் இண்டலிஜின்ஸ்
- இந்த போனின் விலை ரூ.82,900 முதல் தொடங்குகிறது
ஐபோன் 17 ஏர் சிறப்பு அம்சங்கள்
- இதுவரை அறிமுகமான ஐபோன்களில் மிகவும் மெல்லிய போனாக ஐபோன் 17 ஏர் அறியப்படுகிறது
- வழக்கமாக அறிமுகமாகும் பிளஸ் மாடலுக்கு விடைகொடுத்து ஐபோன் 17 ஏர் மாடல் போனை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது
- 6.5 இன்ச் எல்டிபிஓ ஸ்கிரீன் டிஸ்பிளே
- இந்த போனின் எடை 165 கிராம்
- 5.6 மில்லிமீட்டர் என்ற அளவில் மெல்லிய ஐபோனாக இது அறியப்படுகிறது
- ஏ19 புரோ சிப்செட்
- 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 18 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 256ஜிபி / 512ஜிபி / 1டிபி என மூன்று விதமான ஸ்டோரேஜ் வேரியன்ட்டில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது
- இந்த போனின் விலை ரூ.1,19,900 முதல் ஆரம்பமாகிறது
ஐபோன் 17 புரோ, 17 புரோ மாஸ்க் போன்களின் சிறப்பு அம்சங்கள்
- ஐபோன் 17 புரோ 6.3 இன்ச் டிஸ்பிளே
- ஐபோன் 17 புரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்பிளே
- பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. மூன்றுமே 48 மெகாபிக்சலை கொண்டுள்ளன
- 18 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- புரோ மாடலில் 31 மணி நேரமும், புரோ மேக்ஸ் மாடலில் 37 மணி நேரமும் வீடியோ பிளேபேக் உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது
- 256ஜிபி / 512ஜிபி / 1டிபி / 2டிபி என நான்கு ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்டுள்ளது
- ஐபோன் 17 புரோ போனின் விலை ரூ.1,34,900 முதல் தொடங்குகிறது
- ஐபோன் 17 புரோ மேக்ஸ் போனின் விலை ரூ.1,49,900 முதல் தொடங்குகிறது