புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2024 – 2025-ம் நிதியாண்டில் ராணுவத் தளவாடங்களின் ஆண்டு உற்பத்தி இதுவரை இல்லாத அளவில் ரூ.1,50,590 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியாக இருந்தது. இது ஒரே ஆண்டில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2019-20-ம் ஆண்டில் ராணுவத் தளவாட உற்பத்தி ரூ. 79,071 கோடியாக இருந்தது. இது கடந்த 5 ஆண்டுகளில் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீ்ழ், ராணுவத் தளவாட தயாரிப்பில் தற்சார்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்ததால், இந்த சாதனையை படைக்க முடிந்தது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.