ராம்கர்: பிஹார் தேர்தலில் ராம்கர் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சதீஷ் குமார் யாதவ் வெறும் 30 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் சதீஷ் குமார் யாதவ் 72,689 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக எம்எல்ஏ அசோக் குமார் சிங் 72,659 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். கடந்த சில ஆண்டுகளாக பிஹார் தேர்தலில் எந்த வெற்றியையும் பகுஜன் சமாஜ் கட்சி பெறவில்லை. இந்நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் 30 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2005-ம் ஆண்டு முதல் ராம்கர் தொகுதியில் ஆர்ஜேடி கட்சியும், பாஜகவும் மாறி மாறி வெற்றி பெற்று வந்தன. மேலும், பிஹாரின் 2 தொகுதிகளில் 100-க்கும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

