Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“வீதிக்கு வராமல் வீட்டிலேயே இருங்கள்” – காஷ்மீர் மக்களுக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள்
    தேசியம்

    “வீதிக்கு வராமல் வீட்டிலேயே இருங்கள்” – காஷ்மீர் மக்களுக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள்

    adminBy adminMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “வீதிக்கு வராமல் வீட்டிலேயே இருங்கள்” – காஷ்மீர் மக்களுக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை சுற்றியுள்ள மக்கள் வீதிகளில் இறங்குவதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இப்போது ஜம்மு இருளில் மூழ்கியுள்ளது. நகர் முழுக்க சைரன் ஒலிகளை கேட்கமுடிகிறது. குண்டுவெடிப்பு மற்றும் கனரக பீரங்கித் தாக்குதல்களின் சத்தங்கள் விட்டுவிட்டு கேட்கின்றன. ஜம்மு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து தெருக்களில் இறங்குவதைத் தவிர்த்து, வீட்டிலேயே இருங்கள்.

    அடுத்த சில மணிநேரங்களுக்கு நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள். வதந்திகளைப் புறக்கணிக்கவும். ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத கதைகளைப் பரப்பாதீர்கள். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்” இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    It’s my earnest appeal to everyone in & around Jammu please stay off the streets, stay at home or at the nearest place you can comfortably stay at for the next few hours. Ignore rumours, don’t spread unsubstantiated or unverified stories & we will get through this together.

    — Omar Abdullah (@OmarAbdullah) May 9, 2025

    கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    தேசியம்

    பயணிகளின் அனைத்து தேவைகளுக்குமான ரயில்ஒன் செயலி – ரயில்வே அமைச்சர் அறிமுகம்

    July 1, 2025
    தேசியம்

    தெலங்கானா விபத்து: உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு; ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

    July 1, 2025
    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்
    • இந்த மாலை உணவுகள் மற்றும் பானங்கள் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அல்சைமர் ஆபத்தை அதிகரிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?
    • பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் திமுக செயல்படுகிறது: கட்சி நிர்வாகிகள் கூட்டாக பேட்டி
    • ஆப்டிகல் மாயை: 4502 களின் மத்தியில் மறைக்கப்பட்ட 4052 ஐக் கண்டறியவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.