ஹைதராபாத்: ஹைதராபாத் சாதர்காட் பகுதியை சேர்ந்தவர் ஃபஹியுத்தீன். வியாபாரி. இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களும் துணைக்கு வீட்டில் இருந்த தனது வயதான பெற்றோருக்கு சொல்லிவிட்டு, ஃபஹியுத்தீன் மனைவியுடன் இருக்க மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, கொள்ளையர்கள் அந்த வீட்டின் பின்புறமாக வீட்டுக்குள் குதித்தனர். அதன் பின்னர், வீட்டில் இருந்த முதியோரை ஒரு அறையில் அடைத்து தாளிட்டனர். பின்னர், வீட்டில் இருந்த 700 கிராம் தங்க நகைகளை பீரோவில் இருந்து கொள்ளையடித்தனர்.
அதன் பின்னர், பிரிட்ஜில் இருந்த பழங்கள், திண்பண்டங்களை ருசித்து சாப்பிட்டு விட்டு,அதன் பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்த ஃபஹியுத்தீன் தனது பெற்றோரின் கூச்சலும், அழுகையையும் கேட்டு அதிர்ச்சி அடைந்து அறையின் கதவை திறந்து நடந்தவற்றை கேட்டறிந்தார். அதன் பின்னர், இது தொடர்பாக சாதர்காட் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.