புதுடெல்லி: வீடுதோறும் மூவர்ணக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வீடுதோறும் மூவர்ணக்கொடி பிரச்சாரத்தின் கீழ் எனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினேன்.
பிரதமர் மோடி தலைமையில் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரம் இன்று தேசத்தை ஒற்றுமையின் இழையில் பிணைத்து, தேசபக்தியை வலுப்படுத்தும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.
எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் தியாகம், தவம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் பெற்ற சுதந்திர இந்தியாவை மேம்படுத்த நாட்டின் 140 கோடி மக்களும் உறுதியாக உள்ளனர் என்பதை இந்தப் பிரச்சாரம் நிரூபிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.