அகமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு அவரது அதிர்ஷ்ட எண்ணே, துரதிர்ஷ்ட மாக மாறிய சோகம் நடந்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக ரூபானி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விஜய் ரூபானி, 1206 என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக பயன்படுத்தி வந்தார். தனது வாகன பதிவெண்களில் கூட அந்த எண்ணையே அவர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், ஜூன் 12-ம் நடந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது 1206 என்ற அதிர்ஷ்ட எண்ணான 12.06 தேதியில் அவர் இறந்தது அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறியுள்ளது என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
விமானத்தில் அவரது இருக்கை எண் 12. பயணம் செய்த நேரம் பிற்பகல் 12:10 மணி. இது 12 என்ற எண்ணுடனான அவரது நம்பிக்கையை காட்டுவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். மியான்மரில் 1956, ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் பிறந்த விஜய் ரூபானி, 1996 முதல் 1997 வரை ராஜ்கோட் மேயராகவும், 2006 முதல் 2012 வரையில் மாநிலங்களவை எம்.பி.யாகவும், 2016-ம் ஆண்டு முதல்- 2021-ம் ஆண்டு வரையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார்.