விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நகராட்சி வளர்ச்சிக் குழு சார்பில் கைலாசகிரி மலைப்பகுதியில் 55 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் திறப்பு விழா நடத்தி, பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இது நாட்டிலேயே மிகவும் நீளமான கண்ணாடி மேம்பாலம் என பெயர் பெற்றுள்ளது. 100 பேர் வரை நின்றாலும் எந்த அசம்பாவிதமும் நடக்காது என கூறியுள்ளனர்.
ஆனால், ஒரே சமயத்தில் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது. இதன் மீது ஏறி நடந்தால், பலத்த காற்று வீசும். சுற்றிலும் மலைகளும் அதன் அழகும் நம்மை வெகுவாக ஈர்க்கும். மேலும், கீழே பார்த்தால் மிகப்பெரிய பள்ளத்தாக்குகள் நம்மை பயமுறுத்தும்.