Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»வரலாறு படைத்தார் ஷுபன்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன் விண்கலம்!
    தேசியம்

    வரலாறு படைத்தார் ஷுபன்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன் விண்கலம்!

    adminBy adminJune 26, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வரலாறு படைத்தார் ஷுபன்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன் விண்கலம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புது டெல்லி: இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்களுடன் பயணித்த ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார் ஷுபன்ஷு சுக்லா.

    புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இந்திய நேரப்படி 12:01-க்கு ஏவப்பட்ட ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம், தனது 28 மணி நேர பயணத்தை நிறைவு செய்து இன்று இந்திய நேரப்படி மாலை 4:01 மணியளவில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து 424 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

    நாசாவின் நேரடி வீடியோ இணைப்பு, டிராகன் விண்கலமானது விண்வெளி நிலையத்தை நெருங்குவதைக் காட்டியது மற்றும் டாக்கிங் (docking) பணி மாலை 4:15 மணிக்கு நிறைவடைந்தது. டிராகன் விண்கலம் தரையிறங்கியவுடன், இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

    Axiom Mission 4 aboard the @SpaceX Dragon docked to the station at 6:31am ET today. Soon the Ax-4 astronauts will open the hatch and greet the Exp 73 crew live on @NASA+. More… pic.twitter.com/LjjMd7DfmW

    — International Space Station (@Space_Station) June 26, 2025

    ஷுபன்ஷு சுக்லா யார்? – அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு 4 விண்வெளி வீர்களை அனுப்பி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை தயாரித்தது. இதற்கு இஸ்ரோ சார்பில் செல்ல ககன்யான் திட்டத்துக்கு ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை பைலட்களில் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார்.

    உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் ஷுபன்ஷு சுக்லா. கடந்த 1985-ம் ஆண்டு பிறந்த இவர், 2006-ல் இந்திய விமானப்படையில் பைலட்டாக சேர்ந்தார். 2019-ம் ஆண்டு விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி மையத்துக்கு இவர் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்.

    ஷுபன்ஷு சுக்லாவுடன் சேர்ந்து, அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்) , போலந்தின் ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் விண்வெளி மையம் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற ‘கிரேஸ்’ என பெயரிடப்பட்ட டிராகன் விண்கலம், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று மதியம் 12.01 மணிக்கு அனுப்பப்பட்டது. இவர்களது பயணம் இந்த மாதத்தில் மோசமான வானிலை மற்றும் திரவ ஆக்ஸிஜன் கசிவு போன்ற காரணங்களால் 3 முறை ஒத்திபோடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விண்வெளி பயணத்துக்கு முன் சுக்லா அளித்த பேட்டியில், ‘‘நான் விண்வெளிக்கு ஆய்வு உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்லவில்லை. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை கொண்டு செல்கிறேன்’’ என்றார்.

    60 ஆய்வுகள்: சர்வதேச விண்வெளி மையம் சென்றுள்ள இந்தக் குழுவினர், இஸ்ரோவின் 7 அறிவியல் சோதனைகளுடன் சுமார் 60 பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் 2 வாரம் காலம் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர் ஆய்வுகளை முடித்துவிட்டு டிராகன் விண்கலத்தில் பூமி திரும்புவர்.

    41 ஆண்டுகளுக்குப் பின்: விண்வெளி பயணம் மேற்காண்ட முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. இவர் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் 41 ஆண்டுகளுக்குப்பின் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்தியர் ஷுபன்ஷு சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராகேஷ் சர்மாவின் நினைவாக ஒரு பொருளையும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதை விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பியபின் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை

    August 27, 2025
    தேசியம்

    இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல்: பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி

    August 27, 2025
    தேசியம்

    இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல்

    August 27, 2025
    தேசியம்

    “50 ஆண்டுகள் பாஜக ஆட்சி என்று அமித்ஷா சொல்வதன் காரணம்…” – ராகுல் காந்தி விவரிப்பு

    August 26, 2025
    தேசியம்

    ஜம்முவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

    August 26, 2025
    தேசியம்

    கேரளாவில் 18 பேருக்கு மூளை – அமீபா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஐ.சி.எம்.ஆர் ஆய்வு இந்திய பெண்களிடையே முதல் இரண்டு புற்றுநோய்களை வெளிப்படுத்துகிறது; முன்கூட்டியே கண்டறிதல் இறப்புகளைத் தடுக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டீன் புற்றுநோய் எச்சரிக்கை: 19 வயதான கழுத்து மற்றும் தோள்பட்டை வலி மறைக்கப்பட்ட கட்டி வெளிப்படுத்தப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் தாவரங்களை பாதுகாக்கும் மற்றும் தோட்ட பூச்சிகளைக் குறைக்கும் 5 அத்தியாவசிய பூச்சிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை
    • இந்தியா – பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.