ஹைதராபாத்: மகாராஷ்டிர மாநிலம், மும்பை மிரா சாலையில் கடந்த மாதம் வங்கதேசத்தை சேர்ந்த ஃபாத் திமா முராத் ஷேக் (23) என்ற மொல்லா எனும் இளம் பெண்ணை மும்பை போலீ ஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அப்பெண்ணிடம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர் பாக போலீஸார் தொடர்ந்து நடத் திய விசாரணையில் பல திடுக் கிடும் விவரங்கள் தெரியவந் தன. மொல்லா கொடுத்த தகவல் களின் அடிப்படையில் இந்தியா வில் 60 இடங்களில் மகாராஷ்டிர மாநில போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப் போது தெலங்கானா மாநிலம், சேரமல்லி பகுதியில் இயங்கிவந்த ஒரு ரசாயன தொழிற்சாலையை மகாராஷ்டிர போலீ ஸார் சோதனையிட்டதில் அங்கு 35 ஆயிரம் லிட்டர் ரசாயன போதைப்பொருள் (மெப்ட்ரோன்) இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த ரசாயன தொழிற்சாலை தெலங்கானாவில் இதே இடத் தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வங் கதேசத்து இளம் பெண், ஐடி பொறியாளர் உட்பட 12 பேரை மகாராஷ்டிர போலீஸார் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய் யப்பட்ட ரசாயன போதைப் பொருளின் மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.
ரசாயன போதைப்பொருள் விவகாரத்தில் வெளிநாட்டு நபர் களுக்கும் தொடர்பு உள்ளதால், இது சர்வதேச சந்தையிலும் விற் கப்படுகிறதா? என மும்பை மற்றும் தெலங்கானா போலீஸார் விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.