Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, April 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ரூ.1 கோடி ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்: அசாமில் பெண் அதிகாரி கைது
    தேசியம்

    ரூ.1 கோடி ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்: அசாமில் பெண் அதிகாரி கைது

    adminBy adminSeptember 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரூ.1 கோடி ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்: அசாமில் பெண் அதிகாரி கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: அசாம் முதல்வரின் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு அதிகாரி நுபுர் போரா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ.1 கோடி ரொக்கம், தங்கநகைகளை பறிமுதல் செய்து, அப்பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாஜக ஆளும் அசாமில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு அதிகாரி நுபுர் போராவின் வீட்டில் சோதனை நடத்தியது. இவர், அசாம் சிவில் சர்வீசஸ் (ஏசிஎஸ்) அதிகாரியாகப் பணியாற்றுபவர்.

    இவரது வீட்டில் நேற்று இரவு, நடந்த திடீர் சோதனையில் சுமார் ரூ.90 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன. மீட்கப்பட்ட மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெண் அதிகாரியான நுபுர் போரா கடந்த ஆறு மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இதன் பின்னணியில், அவர் தனது பதவிக் காலத்தில் சட்டவிரோதமாக பெரும் சொத்துக்களை ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

    முதல்வரின் விசாரணை அதிகாரிகள் அளித்த தகவல்களின்படி, பர்பேட்டா மாவட்டத்தில் வட்ட அதிகாரியாக நுபுர் போரா இருந்துள்ளார். அப்போது அவர், சந்தேகத்திற்குரிய ஊடுருவல்காரர்களின் பெயரில் அரசாங்க நிலங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இப்பெண் அதிகாரிக்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை துவங்கி விட்டது.

    இதில் ஒருவரான பாக்பர் வருவாய் வட்டத்தைச் சேர்ந்த மண்டல அதிகாரியான சுராஜித் தேகா சிக்கியுள்ளார். சுராஜித் தேகாவின் பல மாடி வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இவரும் தன் வருமான அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாகவும், பல நிலங்களை வாங்கியதாகவும் தேகா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, தேகாவும், நுபுர் போராவுடன் இணைந்து சட்டவிரோதமாக இந்த சொத்துக்களை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அசாமின் பல இடங்களில் தொடர்ந்து வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ – ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்

    December 3, 2025
    தேசியம்

    “அடுத்து மேற்கு வங்கத்திலும் காட்டாட்சியை அகற்றுவோம்” – பிரதமர் மோடி உறுதி

    December 3, 2025
    தேசியம்

    பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி

    December 3, 2025
    தேசியம்

    பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்

    December 3, 2025
    தேசியம்

    டெல்லி கார் குண்டுவெடிப்பு: புல்வாமாவில் மருத்துவர் உமர் நபியின் வீடு இடிப்பு

    December 3, 2025
    தேசியம்

    ‘பரகாமணி’ திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • BTS, Coldplay முதல் Queen மற்றும் The Beatles வரை: விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் போது நாசா ஆர்ட்டெமிஸ் II ‘மூன் ட்யூன்ஸ்’ பிளேலிஸ்ட் வைரலாகிறது
    • நாராயண மூர்த்தியின் அன்றைய வெற்றி மேற்கோள்: “உங்கள் வேலையை நேசிக்கவும், ஆனால் ஒருபோதும்…” – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பச்சைத் திரையில் இருந்து சந்திரனில் உள்ள மர்மமான பொருள் வரை – ஆர்ட்டெமிஸ் II சதி கோட்பாடுகள் சமூக ஊடகங்களை நிரப்புகின்றன – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • துபாய் விமான நிலையங்கள் ஏப்ரல் 11 புதுப்பிப்பு: எமிரேட்ஸ் 100+ இடங்களுக்கு குறைக்கப்பட்ட விமானங்களை இயக்குகிறது; ஜூன் 15 வரை பயணிகள் மீண்டும் முன்பதிவு செய்யலாம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் வீட்டைச் சுற்றி பறவைகள் பாடும் போது: அது உங்கள் மனதையும் நல்வாழ்வையும் அதிகரிக்கும் என்று அறிவியல் கூறுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.