புதுடெல்லி: மேற்கு வங்க மாநில வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதில் சம்பந்தப்பட்டுள்ள 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், 5 பேரில் 2 பேரை மட்டும் பணியிலிருந்து விடுவித்து அதற்குப் பதிலாக 2 பேரை புதிதாக வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபடுவதற்காக மேற்கு வங்க அரசு நியமித்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள 3 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த்தை டெல்லிக்கு வரும் 13-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு ஆஜராகி அதிகாரிகள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.