புதுடெல்லி: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க கோரி ஹிமான்ஷு குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சந்துருக்கர் அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த மே 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, முதல்நிலை தேர்வு முடிந்த உடனே விடைக் குறிப்புகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா தெரிவித்தபோது, யுபிஎஸ்சி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் நாளை மீண்டும் விசாரிக்கவுள்ள நிலையில், யுபிஎஸ்சி ஏற்கெனவே எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. முதல்நிலை தேர்வு முடிந்த உடனே விடைக் குறிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.