இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் மதுபான விற்பனையில் போலி ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டதால், அரசுக்கு ரூ.49.42 கோடி இழப்பு ஏற்பட்டதாக இந்தூரில் உள்ள ராவ்ஜி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் விசாரணையை தொடங்கியது.
இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட திரிவேதி மற்றும் தஷ்வந்த் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அமலாக்கத்துறை காவலில் எடுக்கப்பட்டு உள்ளனர். நிதி மோசடி பணம் எவ்வாறு பிறருக்கு மாற்றப்பட்டது என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வரும் நாட்களில் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.