இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை, ஆயுதங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மணிப்பூரின் விஷ்ணுபூர், தவுபால், மேற்கு இம்பால், கிழக்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொது மக்களிடம் அச்சுறுத்தி பணம் பறித்ததாக 3 தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 5 பேரை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
நான்கு தீவிரவாதிகளும், மக்கள் விடுதலைப் படை, காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி, ப்ரீபக் (புரோ) ஆகிய 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதற்கிடையில் சூரசந்த்பூர் மற்றும் தவுபால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வெவ்வேறு நடவடிக்கைகளில் 26 துப்பாக்கிகள், 9 வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகளை நேற்று முன்தினம் கைப்பற்றினர்.