Last Updated : 29 Aug, 2025 01:07 AM
Published : 29 Aug 2025 01:07 AM
Last Updated : 29 Aug 2025 01:07 AM

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: நாடு முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட குழுக்களை மேற்கு வங்கத்தில் பாஜக பணியில் அமர்த்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதை நோக்கமாக கொண்டு கணக்கெடுப்புகளை நடத்துகிறது.
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். உங்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும். நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க மாட்டேன்.இவ்வாறு மம்தா கூறினார்.
FOLLOW US
தவறவிடாதீர்!