புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரிக்க கோரி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் இருப்பதால், வழக்கறிஞர்கள் சரியாக உச்சரிக்க முடியவில்லை. இ
துதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024 செப்டம்பரில் உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வரவே இல்லை’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் முக்கியத்துவம்
கருதி, அவற்றை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட்டு விரைந்து விசாரிக்க வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளனர்.