
பாட்னா: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட 25 அமைச்சர்களில் 24 பேர் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா ஆகியோர் முறையே தாராப்பூர், லக்கிசராய் தொகுதிகளில் வெற்றி கண்டனர். தற்போது முதல்வராக உள்ள நிதிஷ் குமார், மேலவை உறுப்பினராக(எம்எல்சி) இருக்கிறார். அதனால் அவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

