பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி (55). கர்நாடக யோகா வளர்ச்சி ஆணைய செயலாளராக உள்ளார். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் சன் ஷைன் யோகா என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், 19 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ராஜராஜேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “யோகா குரு நிரஞ்சனா மூர்த்தியிடம் பயிற்சி பெற்ற போது கடந்த 2023ல் தாய்லாந்து சென்றோம்.
அப்போது 17 வயது சிறுமியாக இருந்த என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நிரஞ்சனா மூர்த்தியை கைது செய்தனர்.