Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?’ – ட்ரம்ப் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கேள்வி
    தேசியம்

    ‘பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?’ – ட்ரம்ப் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கேள்வி

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?’ – ட்ரம்ப் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11-வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 21 நாட்களில் 11வது முறையாகக் கூறியுள்ளார்.

    இந்தியாவும் பாகிஸ்தானும் அணுஆயுத மோதலில் ஈடுபடாமல் தடுக்க வர்த்தகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றதாக ட்ரம்ப் கூறுகிறார். அதோடு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகக் கருதும் அமெரிக்காவின் பார்வையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது

    ஆனால் டொனால்ட் ட்ரம்ப்பின் நண்பர் நரேந்திர மோடி, இதனை மவுனத்துடன் தொடர்ந்து புறக்கணிக்கிறார். பிரதமர் ஏன் பேசவில்லை? மோடி எப்போதும் செய்வதை (அதாவது பொய் பேசுவதை) அதிபர் ட்ரம்பும் செய்கிறாரா? அல்லது அவர் 50% உண்மையைப் பேசுகிறாரா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகள் இருதரப்பு ரீதியாகவும், மூன்றாம் தரப்பு தலையீடு இல்லாமலும் தீர்க்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் டொனால்டு ட்ரம்பின் கருத்தை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதல் நிறுத்தப்பட்டதில் அமெரிக்காவின் பங்கு பற்றி விளக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    முன்னதாக அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “அடுத்த வாரம் பாகிஸ்தான் பிரதிநிதிகள்(அமெரிக்கா) வருகிறார்கள். இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்வதற்கு நாங்கள் மிக நெருக்கமாக இருக்கிறோம். அவர்கள் ஒருவருக்கொருவர் போரில் ஈடுபட்டால், அவர்களுடன் ஒப்பந்தம் செய்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இருக்காது.

    இந்தியாவையும், பாகிஸ்தானையும் நாங்கள் கையாள்கிறோம். அணு ஆயுதப் போரை நிறுத்த முடிந்தது என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பொதுவாக அதை தோட்டாக்கள் மூலம் செய்கிறார்கள். நாங்கள் அதை வர்த்தகம் மூலம் செய்கிறோம். அதனால் நான் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகவும் மோசமான சாத்தியமான போர் நடந்து கொண்டிருந்தது. இப்போது, ​​நீங்கள் பார்த்தால், அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.” என்று தெரிவித்திருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    தேசியம்

    உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

    June 29, 2025
    தேசியம்

    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

    June 29, 2025
    தேசியம்

    தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மகிழ்ச்சியான திருமணத்திற்கு 5 பழக்கம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்
    • இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்
    • விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
    • ‘தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சிதான் அமையும்’ – விஜய பிரபாகரன் கணிப்பு
    • முன்கூட்டியே திட்டமிடல் தேவையில்லாத பெங்களூரில் இருந்து ஒரு நாள் பயணங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.