ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று ஹைதராபாத்தில் கூறியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நம் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கம் தகுந்த பாடம் கற்பித்துள்ளோம்.
பிரதமரின் நடவடிக்கைக்கு நாம் துணை நிற்க வேண்டும். நாட்டில் கடைசி தீவிரவாதி கொல்லப்படும் வரை பிரதமர் ஓய மாட்டார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வரும் அரசியல்வாதிகள் தங்களின் மனோபாவத்தை மாற்றிக்கொள்வது அவசியம். இந்திய ராணுவத்தையோ, அரசையோ சமூக வலைதளங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.