Last Updated : 09 Aug, 2025 07:31 AM
Published : 09 Aug 2025 07:31 AM
Last Updated : 09 Aug 2025 07:31 AM

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றப்பட்டது. பழைய சட்டத்தில் இருந்த பல சிக்கலான நடைமுறைகளை களைந்து எளிமைப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த புதிய வருமான வரி மசோதா 2025 கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாவில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, தேர்வுக் குழு வழங்கிய பெரும்பாலான பரிந்துரைகளை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதாவின் புதிய பதிப்பு ஆகஸ்ட் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக கடந்தாண்டு பிப்ரவரியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா 2025 நேற்று முறையாக வாபஸ் பெறப்பட்டது.
FOLLOW US
தவறவிடாதீர்!