புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள மதரஸா ஒன்றில் 16 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பயிலும் சிறுவனை, அங்கு படிக்கும் மற்ற மாணவர்கள் 5 பேர் கடந்த 6 மாதமாக தகாத உறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இது குறித்து தனது பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப்போவதாக சிறுவன் மிரட்டியுள்ளான். இதனால் அந்த சிறுவனை கொலை செய்ய மதரஸா மாண வர்கள் 5 பேர் முயற்சித்தனர். சில நாட்களுக்கு முன் அந்த சிறுவனை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்ய முயற்சித்தனர்.
ஆனால் அந்த சிறுவன் தலையில் சிறு காயத்துடன் தப்பிவிட்டான். இந்நிலையில் கடந்த 2-ம் தேதியும், அந்த சிறுவனை 2 மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு செய்துள்ளனர். அதன்பின் சிறுவனின் கழுத்தை பிடித்து நெரித்து தண்ணீர் தொட்டியில் அழுத்தி கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து மதரஸாவில் படித்த தங்களது மகனை காணவில்லை என போலீஸில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அவனது உடல் மதரஸா அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடந்தது. இச்சம்பவம் தொடர்பாக மதரஸாவில் படிக்கும் 5 மாணவர்களை போலீஸார் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் தற்போது சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.