காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு நகரில் உள்ள கும்பாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை கலை திருவிழா நடைபெற்றது. இதில் பாலஸ்தீனம் தொடர்பான கதை சொல்லும் நிகழ்ச்சியை நடத்த மாணவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 2 ஆசிரியர்கள் அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆசிரியர்களின் இந்த செயலைக் கண்டித்து முஸ்லிம் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியை தடுத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.