ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்தில் 161-வது தேசிய நெடுஞ்சாலையில் பிட்லம் எனும் ஊரிலிருந்துயட்னூரு எனும் இடத்துக்கு ஒரு லாரி நேற்று சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரியின் கேபினில் 4 பேர் அமர்ந்திருந்தனர். லாரி ஒரு பாலத்தின் மீது செல்லும்போது, ஸ்டியரிங்கை திருப்ப முடியாமல் லாரி ஓட்டுநர் சாலையில் குதித்து உயிர் தப்பினார்.
ஆனால், லாரி பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதி அந்தரத்தில் நின்றது. அதே சமயத்தில் லாரியின் கேபினில் இருந்த 4 பேரும் 20 மீட்டர் கீழே உள்ள சர்வீஸ் சாலையில் விழுந்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள மூவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.