
கொல்கத்தா: ‘‘பாஜக.வினருக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் வழங்குவதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். இவரது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி. அவ்வப்போது ஏதாவது கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

