Last Updated : 17 Jun, 2025 08:20 AM
Published : 17 Jun 2025 08:20 AM
Last Updated : 17 Jun 2025 08:20 AM

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறுகையில், “அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு வாஷிங்டனில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அழைக்கப்பட்டுள்ளார். இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவு” என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தவறான தகவல் என்று வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று டெல்லியில் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி மக்களை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறது என்பதை இது காட்டுகிறது. இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். பாகிஸ்தானின் ஊதுகுழலாக காங்கிரஸ் செயல்படுகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஜெய்ராம் ரமேஷுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.
FOLLOW US
தவறவிடாதீர்!