Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு: ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது
    தேசியம்

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு: ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

    adminBy adminJune 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு: ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜெய்சால்மரில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்த ஷகூர் கான், முக்கியமான ஆவணங்களை ஐஎஸ்ஐ ஏஜென்டுகளுக்கு அனுப்பிய புகாரில் கைதாகியுள்ளார்

    ஜெய்சால்மரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஷகூர் கான் என்பவரை, உளவு பார்த்த கடுமையான குற்றச்சாட்டில் ராஜஸ்தான் உளவுத் துறை கைது செய்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முகவர்களுடன் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் காவல் துறைத் தலைவர் (சிஐடி) விஷ்ணு காந்த் குப்தா, ஷகூர் கான் நீண்ட காலமாக கண்காணிப்பில் இருந்ததை உறுதிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர், “கண்காணிப்பின்போது, ​​பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் சில நபர்களுடன், குறிப்பாக அஹ்சன்-உர்-ரஹீம் என்கிற டேனிஷ் மற்றும் சோஹைல் கமர் ஆகியோருடன் ஷகூர் கான் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது. டேனிஷ் ஏற்கெனவே இந்திய அரசாங்கத்தால் ‘விரும்பத்தகாத நபர்’ என்று அறிவிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது” என்று அவர் மேலும் கூறினார்.

    ஜெய்ப்பூரில் உள்ள மத்திய விசாரணை மையத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​ஷகூர் கான் பல முறை பாகிஸ்தானுக்குச் சென்று டேனிஷ் உதவியுடன் விசா பெற்றதாக ஒப்புக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்தபோது, ​​அவர் ஐஎஸ்ஐ முகவர்களை சந்தித்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் இந்தியா திரும்பியதும், மூலோபாய தகவல்களைச் சேகரித்து, வாட்ஸ்அப் போன்ற தளங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் முகவர்களுக்கு அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜெய்சால்மரில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்த ஷகூர் கான் மீது, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு

    June 30, 2025
    தேசியம்

    பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

    June 29, 2025
    தேசியம்

    புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

    June 29, 2025
    தேசியம்

    மார்ச் 2026-க்குள் மாவோயிஸம் நாட்டிலிருந்து ஒழிக்கப்படும்: அமித்ஷா சூளுரை

    June 29, 2025
    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து
    • கடின உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம்: உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சியில் போட்டித் தேர்வர்கள், மாணவர்களுக்கு அறிவுரை
    • அன்புமணி திடீர் டெல்லி பயணம்
    • எலும்புகளை வலிமையாக்க உடலுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துக்கள்
    • ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.