Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு: இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
    தேசியம்

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு: இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு: இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஏவுதளங்களை வெற்றிகரமாக அழித்துள்ளதாக அறிவித்துள்ள இந்திய ராணுவம் அதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக ராணுவம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மே 8 – 9 இடைப்பட்ட இரவில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல் முயற்சிகளுக்கான பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் ஏவுதளங்களைக் குறிவைத்து அழித்தது. அவை தடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. இந்த ஏவுதளங்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அமைந்துள்ளன. இங்கிருந்துதான் இந்திய மக்கள் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் பயங்கரவாத தாக்குதல் சதிகள் முன்பு நடத்தப்பட்டன. இந்திய ராணுவத்தின் அதிரடியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளின் இயங்குதிறனுக்கு பலத்த அடியாக இறங்கியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    OPERATION SINDOOR

    Indian Army Pulverizes Terrorist Launchpads

    As a response to Pakistan’s misadventures of attempted drone strikes on the night of 08 and 09 May 2025 in multiple cities of Jammu & Kashmir and Punjab, the #Indian Army conducted a coordinated fire assault on… pic.twitter.com/2i5xa3K7uk

    — ADG PI – INDIAN ARMY (@adgpi) May 10, 2025

    இந்தியா – பாக். மோதல்: நடப்பது என்ன? – கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சத்தீஸ்கரில் ரூ.81 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த 30 மாவோயிஸ்டுகள் சரண்

    August 28, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

    August 28, 2025
    தேசியம்

    பருவமழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு

    August 28, 2025
    தேசியம்

    தமிழகத்தில் பிஹாரிக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர்

    August 28, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    August 28, 2025
    தேசியம்

    “அரசியலமைப்பை காக்க குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறேன்” – சுதர்சன் ரெட்டி

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் கிவியை உரிப்பதை நிறுத்துங்கள்: தோல் ஏன் ஆரோக்கியமான பகுதி என்பதை ஒரு இரைப்பை குடல் நிபுணர் வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு விரைந்து நலம் பெற விழைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
    • மகாராஷ்டிரா தொழிலாளர் சட்டம் வேலை நேரம் அதிகரிக்கக்கூடும்: 10 மணி நேர வேலை நாட்கள் மற்றும் அதிகப்படியான நேரம் முன்மொழியப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழகத்தில் செப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு
    • முடி வளர்ச்சியை அதிகரிக்க எண்ணெயைத் தவிர 5 செய்ய வேண்டிய விஷயங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.