ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கலாபன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நிலம் உள்வாங்கியதில் சுமார் 50 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், “சேதமடைந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை வீடுகள் ஆகும். 3 பள்ளிக் கட்டிடங்கள், ஒரு மசூதி, ஒரு கல்லறை மற்றும் அந்த கிராமத்துக்கு செல்லும் சாலையும் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நிலம் உள்வாங்கி வருவதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்’’ என்றார்.
கலாபன் கிராமத்துக்கு மாநில ஜல்சக்தி மற்றும் வனத் துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.