புதுடெல்லி: மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதில்: பல்வேறு ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை சாதனங்களை, ரயில்டெல் நிறுவனம் பொருத்தி சேவையை வழங்கி வருகிறது.
மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும், 4ஜி, 5ஜி செல்போன் சேவையை டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 6,115 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை இணைய சேவையை ரயில்டெல் வழங்கி வருகிறது.
டெல்லி, சூரத், அகமதாபாத், பானிபட், தன்பாத், சிம்லா, மங்களூரு, யஷ்வந்த்பூர், தார்வாட், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல், புனே உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.