புதுடெல்லி: நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில்-கப்லாங் (என்எஸ்சிஎன்-கே) மற்றும் அதன் அனைத்து பிரிவுகள், முன்னணி அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு சட்டவிரோத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 28 முதல் இது அமலுக்கு வருகிறது.
உல்ஃபா (ஐ), பிரிபாக், பிஎல்ஏ போன்ற பிற சட்டவிரோத அமைப்புகளுடன் என்எஸ்சிஎன்-கே இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து என்எஸ்சிஎன்-கே அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. இத்தடை தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.