புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6. 11-ம் தேதிகளில் இருகட்டங்களாகநடத்தப்படும். நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறை வடைகிறது. இந்த நிலையில், மாநில சட் டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை டெல்லியில் தலைமைத் தேர் தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று வெளியிட்டார். அப்போது, செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: நேர்மை, நம்பகத்தன்மையுடன் வாக் காளர் பட்டியல் தயாரிப்பது. சுதந்திர மாக, நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவது ஆகிய இரு பிரதான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள் கிறது. பிஹாரில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூன் 24ம் தேதி திருத்தப் பணியை தொடங்கி, ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு பட்டியலை வெளியிட்டோம். அனைத்து கட்சிகளுக் கும் இந்த பட்டியல் வழங்கப்பட்டது.
பின் னர். பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள போதிய அவகாசம் வழங்கப்பட்டது. செப்டம்பர் 30-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டோம். இதில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு நிவாரணம் பெறலாம். பிஹார் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மாநில அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் அதிகாரிகளுடன் விரி வாக ஆலோசனைநடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட ஆலோசனைகளை பரிசீலித்து நேர்தல் தேதிகள் இறுதி செய் யப்பட்டன.
அதன்படி வரும் நவம்பர் 11-ம் தேதி களில் இருகட்டங்களாக பிஹார் பேரவை தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண் ணிக்கை நவ. 14-ம் தேதி நடைபெறும். முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 18-ம் தேதியும். 3-ம் கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் அக்டோபர் 21-ம் தேதியும் தொடங்கும். பிஹாரில் மொத்தம் 243 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. முதல் கட்ட தேர்தலின்போது 121 தொகுதி வளுக்கும். 2-ம் கட்ட தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.
மாநிலத்தில் 3.92 கோடி ஆண்கள், 3.50 கோடி பேர் பெண்கள் உட்பட மொத்தம் 7.43 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். முதல்முறையாக 4 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 14,000 பேர் உள்ளனர். இரு கட்ட வாக்குப்பதிவின்போது மாநிலம் முழுவதும் 90,712 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். இதில் 1,044 வாக்குச்சாவடிகளை பெண்கள் நிர்வகிப்பார்கள். 1,350 வாக்குச் சாவடிகள், முன்மாதிரி வாக்குச்சாவடி களாக அமைக்கப்படும்.
பிஹார் தேர்தலில் முதல்முறையாக 17 புதிய மாற்றங்கள் அமல் செய்யப்பட உள்ளன. இதன்படி வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம் இடம் பெறும். கட்சி சின்னம், பெயர்கள் தெளிவாக தெரியும்படி அச்சிடப்படும். முதல் முறையாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மத்திய பார்வையாளர் நியமிக்கப்பட உள்ளார். பிஹார் தேர்தலுக்காக ‘இசிஐ நெட்’ என்ற பெயரில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான அனைத்து சேவைகளை யும் பெறலாம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்படும். இதுவரை இல்லாத அளவுக்கு சுதந்திர மாக, மிகுந்த வெளிப்படைத்தன்மை, நேர்மையுடன் தேர்தல் நடத்தப்படும்.
ஜம்மு காஷ்மீரில் பட்காம், நாக் ரோட்டா தொகுதிகள், ராஜஸ்தானில் அன்டா, ஜார்க்கண்டில் காட்ஷிலா, தெலங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாபில் தரண் தரண், மிசோரமில் தம்பா, ஒடிசாவில் நவுபாடா ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பெண்களின் முக அடையாளம்: பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த 4ம் தேதி தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜக தலைவர் உமேஷ் குஷ்வாகா கூறும்போது, “புர்கா,பர்தா அணிந்து வரும் பெண்களின் முக அடை யாளத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்ட தற்கு, “பிஹார் சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். புர்கா, பர்தா அணிந்து வரும் பெண்கள் தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டால் தேர்தல் ஆணைய நடைமுறைகளின்படி அவர்களது அடையாளத்தை அங்கன்வாடி பெண் ஊழியர்கள் உறுதி செய்வார்கள்” என்று தெரிவித்தார்.