புதுடெல்லி: நகரங்களில் கட்டிடங்கள் அதிகரிக்கும் அளவை செயற்கைக்கோள் படங்களை கொண்டு கணக்கிட்டு ‘ஸ்கொயர் யார்ட்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் இணையதளம் ஒன்று ‘சிட்டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய நகரங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. நகர்ப்புற எல்லை பல திசைகளில் விரிவடைந்து, தற்போது நகர்ப்புற வளர்ச்சியில் நாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை பெங்களூரு பிடித்துள்ளது. நமது சென்னை இந்த பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இதே காலத்தில் கட்டிடங்களின் அளவு 197 சதுர கி.மீட்டரில் இருந்து 467 சதுர கி.மீ-ஆக உயர்ந்துள்ளது. வாகனம், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளின் வளர்ச்சியால் சென்னையும் வளர்ச்சியடைந்தது.
டெல்லி தேசிய தலைநகர் மண்டலம், ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களின் வளர்ச்சி சதவீதம் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.