ஷில்லாங்: தேனிலவு சென்ற போது, கணவனை கொன்ற வழக்கில் சோனம் உட்பட 5 பேருக்கு எதிராக சிறப்பு விசாரணை குழுப் போலீ ஸார் 790 பக்க குற்றப்பத்திரி கையை தாக்கல் செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி. தொழிலதிபரான இவருக்கும் சோனம் என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரு மணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் கடந்த மே மாதம் 21-ம் நேதி தேனிலவுக்கு மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் சென் றனர். அங்கு ரகுவன்சி மர்மமான முறையில் கொலை செய்யப்பட் டார். அவரது உடல் பல நாட் களுக்குப் பிறகு ஜூன் 2-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. சோனம் தலைமறைவானார்.
பின்னர் தீவிர விசாரணை நடத்தியதில், சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகு வன்ஷியை கொன்றது அம்பல மானது. இந்த வழக்கில் சோனம் உள்ளிட்ட 6 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 790 பக்க குற் றப் பத்திரிகையை எஸ்ஐடி போலீஸார் நேற்று நீதிமன்றத் தில் தாக்கல் செய்தனர். அதில், சோனம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா உட்பட 4 பேர் முக்கிய குற்றவாளிகள் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
முன்னதாக காதலன் ராஜ் குஷ்வாஹாவுக்கும் சோனமுக் கும் தொடர்பு இருந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு கணவன் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய சோனம் திட்டமிட்டுள் ளார். அதற்கு காதலன் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உதவி செய்துள்ளனர் என்று விசாரணை யில் ஆதாரங்களுடன் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.