பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி ரோகிணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேற்று, ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு திருமணமான பெண்ணாக, ஒரு தாயாக நான் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை அவதூறான வார்த்தைகளில் வசைபாடினர். என்னை அடிக்க செருப்பு எடுத்துக்கொண்டு பாய்ந்தனர். நான் என் சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ளவில்லை, நான் உண்மையை விட்டுக்கொடுக்கவில்லை, இதன் காரணமாகவே, இந்த அவமானத்தை நான் தாங்கிக் கொண்டேன்.

