மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தீவிரவாதி தஹாவூர் ரானாவை அமெரிக்காவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் டெல்லி அழைத்து வந்தனர். அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரை ஆக.13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர் ஜித் சிங் உத்தரவிட்டார்.