Last Updated : 07 Jul, 2025 07:28 AM
Published : 07 Jul 2025 07:28 AM
Last Updated : 07 Jul 2025 07:28 AM

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானத்தை சரி செய்ய பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் திருவனந்தபுரம் வந்துள்ளனர்.
இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபவதற்காக பிரிட்டிஷ் கடற்படையின் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த மாதம் வந்தது. இதில் இருந்து புறப்பட்ட எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி அவசரமாக தரையிறங்கியது. இதை பழுது பார்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த விமானத்தின் இறக்கைகளை பிரித்து ஜம்போ விமானத்தில் ஏற்றிச் செல்வதிலும் சிரமங்கள் இருந்தன.
இதனால் பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் குழு, ராயல் விமானப்படையின் ஏர்பஸ் ரக சரக்கு விமானத்தில் எப்-35 விமானத்தை பழுது பார்ப்பதற்கு உபகரணங்களுடன் நேற்று திருவனந்தபுரம் வந்தடைந்தனர். ரூ.924 கோடி மதிப்பிலான இந்த விமானம், பழுதுபார்க்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதை சரிசெய்யும் பணியில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!