திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக அனில்குமார் சிங்கால் நேற்று 2-வது முறையாக ஏழுமலையான் கோயிலில் பதவி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக அவர் நேற்று அதிகாலை தனது குடும்பத்தாருடன் கோயிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். அதன் பின்னர் அனில் குமார் சிங்கால் நிர்வாக அதிகாரியாக பதவி பொறுப்பேற்றார்.
அவர் திருமலை அன்னமைய்யா பவனில் அனைத்து தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் கூறும்போது, “2-வது முறையாக தற்போது மீண்டும் இந்த தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளது எனது பூர்வ ஜென்ம பாக்கியம்” என்றார்.