இம்பால்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் கும்பி பஜாரில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தைச் (பிஎல்ஏ) சேர்ந்த ஞானேஷ்வர் சிங் (49) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் பிஎல்ஏ அமைப்புக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கியதாக அரசு தெரிவித்துள்ளது.
பிஎல்ஏ அமைப்பைச் சேர்ந்த லைஷ்ராம் ஜிதன் சிங் (56) இம்பால் மேற்கு மாவட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் இதே அமைப்பைச் சேர்ந்த சோபி சிங் (50) இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
என்ஆர்எப்எம் அமைப்பைச் சேர்ந்த சுனிலா தேவி என்ற பெண், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட காங்கில்பாக் கம்யூனிஸ்ட் கட்சியின் முஜ்புர் ரஹ்மான் (44), ஷோரென்ஷங்பம் (44) ஆகிய இருவரும் தவுபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.