Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ட்ரம்ப்பை விமர்சித்து பதிந்த கருத்தை நீக்கிய கங்கனா – நட்டா அறிவுரை ஏற்பு
    தேசியம்

    ட்ரம்ப்பை விமர்சித்து பதிந்த கருத்தை நீக்கிய கங்கனா – நட்டா அறிவுரை ஏற்பு

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ட்ரம்ப்பை விமர்சித்து பதிந்த கருத்தை நீக்கிய கங்கனா – நட்டா அறிவுரை ஏற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை விமர்சித்து பாஜக எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரனாவத் ட்வீட் செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார்.

    “இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிம் குக் வசம் ட்ரம்ப் சொன்னது தொடர்பாக நான் பதிவு செய்த ட்வீட்டை நீக்குமாறு தேசியத் தலைவர் நட்டா, என்னை தொடர்பு கொண்டார். அந்தப் பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பதிவு இன்ஸ்டாவில் இருந்து நீக்கி விட்டேன்” என கங்கனா தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

    கங்கனா டெலிட் செய்த ட்வீட்டில் என்ன சொல்லி இருந்தார்? – “இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவர் அமெரிக்க அதிபர். ஆனால் உலக அளவில் அதிகம் விரும்பப்படும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் ஆகியுள்ளார். ஆனால், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். ட்ரம்ப் ஆல்பா மேல் ஆக இருக்கலாம். ஆனால், நமது பிரதமர் ஆல்பா மேல்-களின் தந்தை.

    இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட ரீதியிலான பொறாமையா அல்லது அரசாங்க ரீதியான பாதுகாப்பின்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என கங்கனா அதில் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தைத் தான் தற்போது அவர் நீக்கியுள்ளார்.

    ட்ரம்ப் என்ன சொன்னார்? – தோஹாவில் நடந்த வர்த்தக நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “ ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்சினை உள்ளது. நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை. இந்தியாவில் அவர்களே அவர்களை கவனித்துகொள்வார்கள்.

    இந்தியாவின் நலன் பற்றி நீங்கள் எண்ணினால், அங்கு தொழிற்சாலை அமைக்கலாம். உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. அங்கு பொருட்களை விற்பது கடினம்” என்றார்.

    Respected national president Shri @JPNadda ji called and asked me to delete the tweet I had posted regarding Trump asking Apple CEO Tim Cook not to manufacture in India.

    I regret posting that very personal opinion of mine, as per instructions I immediately deleted it from…



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தலைமறைவான பிஎஃப்ஐ நிர்வாகி விமான நிலையத்தில் கைது: என்ஐஏ நடவடிக்கை

    July 5, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான், சீனா, துருக்கியை எதிர்கொண்டோம்: ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தகவல்

    July 5, 2025
    தேசியம்

    பிஹார் கல்லூரி முதல்வர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

    July 5, 2025
    தேசியம்

    ஜெகன் ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: பவன் கல்யாண் உறுதி

    July 5, 2025
    தேசியம்

    இந்தியாவுக்கு முதல் 3 அபாச்சி ஹெலிகாப்டரை வழங்குகிறது அமெரிக்கா

    July 5, 2025
    தேசியம்

    உ.பி.யில் அரசியலாகும் காவடி யாத்திரை: தாபா உரிமையாளர்களை சோதனை செய்ய களம் இறங்கிய 30 இந்து அமைப்புகள்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “உயரதிகாரிகள் கூறியதாக அஜித்குமார் உடலை போலீஸார் எடுத்துச் சென்றனர்” – அரசு மருத்துவர் சாட்சியம்
    • எலுமிச்சையுடன் வீட்டில் உங்கள் முகத்தை எப்படி வெளுக்குவது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தலைமறைவான பிஎஃப்ஐ நிர்வாகி விமான நிலையத்தில் கைது: என்ஐஏ நடவடிக்கை
    • வாலிபால் அரை இறுதியில் ஐசிஎஃப் அணி!
    • அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.