புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 68 பில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து ஜப்பானிய செய்தி நிறுவனமான அசாஹி ஷிம்பன் கூறியுள்ளதாவது: இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளஉள்ளார். அப்பேது அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். இந்த பயணத்தின்போது இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் பிரகடனத்தை இந்தியாவும், ஜப்பானும் திருத்தி புதுப்பிக்க வாய்ப்புள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் சமகால வாய்ப்புகளுக்கான முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளி்ல 10 டிரில்லியன் யென் (68 பில்லியன் டாலர்) முதலீடு செய்வதற்கான இலக்கை ஜப்பான் நிர்ணயித்துள்ளது. இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு தனியார் நிறுவ னங்களின் முதலீடுகளை ஊக்கு விக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்வாறு அசாஹி நிறுவனம் தெரிவித்துள்ளது.