Last Updated : 08 Aug, 2025 06:44 AM
Published : 08 Aug 2025 06:44 AM
Last Updated : 08 Aug 2025 06:44 AM

புதுடெல்லி: நாட்டின் 14-வது குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும்.
ஆகஸ்ட் 22-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 ஆகும். செப்டம்பர் 9-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கெடுப்பு நடைபெறும். மாநிலங்களவை பொதுச் செயலாளர் பி.சி. மோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
FOLLOW US