ஹைதராபாத்: மொபைல் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, நடிகை பிரணீதா, மஞ்சு லட்சுமி உட்பட 29 பிரமுகர்களிடம் அமலாக்கத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்தது.
இது தொடர்பாக சமீபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருந்தார். இவரை தொடர்ந்து நேற்று இதே வழக்கு தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், விளம்பரத்தில் நடித்ததற்காக பெறப்பட்ட ஊதியம் எவ்வளவு? யார் கொடுத்தார்கள்? என கேட்கப்பட்டது. மேலும் அவரின் வங்கிக் கணக்கு விவரங்களையும் கேட்டதாக தெரியவந்துள்ளது.
இவரை தொடர்ந்து இம்மாதம் 11-ம் தேதி நடிகர் ராணாவும், 13-ம் தேதி நடிகர் மோகன்பாபுவின் மகளான மஞ்சு லட்சுமியும் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.