புதுடெல்லி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் (வயது 52). யா அலி என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். இவர் அசாம், பெங்கால், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடி புகழ்பெற்றவர்.
இவர் அண்மையில் சிங்கப்பூரில் நடைபெறும் நார்த் ஈஸ்ட் சுற்றுலா விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று அவர், ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது ஜூபின் கார்க்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜூபின் கார்க் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜூபின் கார்க் இறந்ததைத் தொடர்ந்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.