புதுடெல்லி: சமஸ்கிருத மொழி அறிவு மற்றும் வெளிப்பாட்டின் காலத்தால் அழியாத ஆதாரமாக விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”இன்று, ஷ்ரவன் பூர்ணிமாவில், உலக சமஸ்கிருத தினத்தைக் கொண்டாடுகிறோம். சமஸ்கிருதம் என்பது அறிவு மற்றும் உணர்வு வெளிப்பாட்டின் காலத்தால் அழியாத ஆதாரமாகும். அதன் தாக்கத்தை பல்வேறு துறைகளில் காணலாம். இந்த நாள் சமஸ்கிருதத்தைக் கற்று பிரபலப்படுத்தும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நபரின் முயற்சியையும் பாராட்ட ஒரு சந்தர்ப்பமாகும்.
கடந்த பத்தாண்டுகளில், சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த நமது அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள், சமஸ்கிருத கற்றல் மையங்கள், சமஸ்கிருத அறிஞர்களுக்கு மானியங்களை வழங்குதல் மற்றும் சமஸ்கிருத ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஞான பாரதம் மிஷன் ஆகியவை அடங்கும். இது எண்ணற்ற மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளித்துள்ளது” என்று அவர் கூறினார்.