ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் கன்கெர் மாவட்டத்தில் உள்ள பினகுன்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மனேஷ் நரேட்டி. நாட்டின் 79-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட்டதையொட்டி தேசியக் கொடி ஏற்றி நரேட்டி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை நரேட்டி, சோட்டே பெதியா பகுதியில் மாவோயிஸ்ட்களால் கொலை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. பினகுன்டா கிராமத்தில்தான் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 29 மாவோயிஸ்ட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு பழிதீர்க்கும் விதமாக மாவோயிஸ்ட்கள் நரேட்டியை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.