கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் முன்னாள் மாணவர் மற்றும் 2 சீனியர் மாணவர்களால் 24 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 3 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி சவுமன் சென் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரமாண பத்திரமும் கேஸ் டைரியையும் ஜூலை 10-ம் தேதி அடுத்த விசாரணை நாளுக்குள் தாக்கல் செய்ய மேற்கு வங்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.